Wednesday, April 29, 2009

தூக்கம் ஒரு அதிசயம்(Good Night)என்னடா இவன் திடீரென தூக்கத்தை பற்றி எழுதுகிறான் என நினைக்கிறீங்களா? இல்லங்க இப்போது அனேகமானவர்கள்; வேளைகளின்றி தூங்குகிறார்களே அவர்களுக்காக (எனக்கும் சேர்த்துதான் ஓ கே யா) அண்மையில் எனக்கு ஒரு புத்தகம் படிக்க கிடைத்தது அந்த புத்தகத்தில் இருந்ததை நான் அப்படியே உங்களுக்காகவும் சுட்டு தருகிறேன் கொஞபடிச்சு பாருங்களன்……….

“தூக்கம் என் கண்களை தழுவட்டுமேதுயரம்
என் நெஞ்சினியில் விலகட்டுமே”

தூக்கத்தைப் பற்றி வெகுகாலமாகவே பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறிவந்திருக்கின்றனர். சேக்ஸ்பியர் தன்னுடைய உலகப் பிரசித்தி பெற்ற மாக்பெத் என்ற நாடகத்தில் தூக்கத்தைப் பற்றி பலவிதமான புகழ் மாலைகளைப்ச் சூட்டுகிறார்.கவலை என்ற கழிந்துNபுhன சட்டையைத் தைத்து மூடும் சாதனம் தூக்கம் என்று கூறும் சேக்ஸ்பியர் தூக்கம் என்பது அன்றாடம் ஏற்படுகின்ற மரணம். ஆனால் மறுநாள் விழித்துக்கொள்கிறோம். என்றோ ஒரு நாள் உறங்குவது போலக் கண்மூடும் மனிதன் மறுபடியும் விழிப்பதே இல்லை. அதனால் இரவு தூங்கப் போகும் நாம் மறுநாள் எழந்திடுவோம் என் நிச்சயமாக நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என மக்களை எச்சிக்கவும் செய்கின்றனார்.கடுமையான உழைப்பினால் உண்டாகும் அலுப்பினைக் கழுவித்தள்ளும் குளியல்தான் தூக்கம் என்று மொழிகிறார் .


மேலும் சொல்கிறார் தளர்ந்து போன மனத்துக்குத் தூக்கம் ஒத்தடம் கொடுக்கிறது. தூக்கம் இறைவன் தந்த விலைமதிப்பற்ற கொடை. வாழ்க்கை என்ற விருந்தில் பரிமாறப்படும் அருமையான ஊட்டச்சத்து தூக்கம். உங்கள் அருகில் தன்னைமறந்து தூங்கும் உங்கள் மனைவியைப் பாருங்கள் காலை முதல் மாலை வரை பம்பரமாய் இயங்கிய அவளுக்கு அந்தத் தூக்கமும் இரவில் இல்லை என்றால் அந்தக்குடும்பப் பெண்ணுக்கு ஓய்வு தான் எப்போது? பகல முழுக்க உழைத்து வியர்வை சிந்துவதும் இந்த இராப் பொழுதில் தான்.

ஆண்டவன் இரவைக் கொடுத்தது மனிதனுக்கு உடலில் ஒரு பகலைக் கொடுப்பதற்காகவே. சேக்ஸ்பியரின் உணர்ச்சிபூர்வமான இந்த மொழிகள் தூக்கம் பற்றித் தெளிவான விளக்கங்களாக அமைந்துள்ளன.மனிதன் உடல்,உள்ளம், ஆகிய இரண்டின் நலத்தையும் காக்கவும் , மீட்கவும் இயற்கை அளித்த விலைமதிப்பற்ற அதிசயப்பரிசு உறக்கம். தூங்குவதற்கு முன் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு உண்ணுங்கள். உண்ணும் வேளையில் விவாதங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உறங்குவதற்கு முன் நல்லதோ கெட்டதோ எந்தச் சிந்தனைகளும் இன்றி மனதை அமைதியாக வைத்துக்கொண்டு தூங்கச் செல்லுங்கள்.

எதையாவது நினைக்கத்தொடங்கினால் நினைவுகள் சங்கிலி;த்தொடர்புகளாக வந்து தூக்கநேரத்தில் பாதியை விழுங்கிவிடும். உறங்குவதும் விழிப்பதும் அவன் கையில் அதனால்தான் மேலைத்தேசத்தவர்கள் உறங்கச் செல்லமுன் குட் நைட் என்று வாழ்த்தி அனுப்புகிறார்கள்.

Sunday, March 15, 2009

உன்னை அறிந்தாள் நீ உன்னை அறிந்தாள் உலகத்தில் போராடலாம்

தன்னை அறிந்து கொள்பவன் தவிர்க்கவேண்டியவைகள்

சிறிய விடயங்களைப் பெரிதாக்குவது. நினைத்தவுடன் செயல் புரிவது விரைவில் குற்ற உணர்வு கொள்வது. எளிதில் கோபம் அடைவது. பொறுமை இன்மை. பிறர் தன்மீது அனுதாபம் கொள்வதை விரும்புவது. அனைத்தையும் மேலோட்டமாக நோக்குவது.

தன்னை அறிந்து கொள்பவன் செய்யவேண்டியவைகள்

அமைதியுடன் யோசித்துச் செயற்படுவதுஎல்லாச் சூழ்நிலைகளிலும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது.எந்த நேரத்திலும் கோபத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது.அறிவுத்திறனை உபயோகித்து நியாயங் காண்பது.சமநிலை உணர்ச்சி பாவங்களை வெளிப்படுத்துவது.

உரியவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளவும்.

Monday, February 16, 2009

13 வயது சிறுவன் அப்பாவானான் இது பிரிட்டனில் நடந்த கொடுமை

இங்கிலாந்தை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுவன் அப்பாவாகி இருக்கிறான். இங்கிலாந்து முழுக்க இதைப் பற்றி தான் இப்போது பேசப்படுகிறது.
இது வருத்தத்திற்குரிய விஷயம் என்று அந்நாட்டு பிரதமர் கார்டூன் பிரவுன் கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன் அருகே உள்ள ஈஸ்ட் பார்ன் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுவன் ஆல்பே. இவனது பெண் தோழி சேன்ட்லே. ஆல்பேவை விட 2 வயது மூத்தவள். அதே பகுதியை சேர்ந்தவள். சேன்ட்லே வீட்டுக்கு ஆல்பே அடிக்கடி போவான். இருவரும் சேர்ந்து விளையாடுவது வழக்கமாம். சிறுவர்கள் தானே என்று பெற்றோரும் சீரியசாக எடுத்து கொள்ளாமல் பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் எல்லை மீறி விளையாடி விட்டார்களாம். அதன் விளைவு சேன்ட்லே கர்ப்பமானார்.
இந்த விஷயம் சேன்ட்லே பெற்றோருக்கு தாமதமாக தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். சேன்ட்லேயிடம் இது பற்றி விசாரித்த போது ஆல்பே தான் காரணம் என்று கூலாக சொன்னாள். காலம் கடந்து விட்டதால் கருவை கலைக்கவும் முடியவில்லை. இதன் விளைவாக கடந்த திங்கட்கிழமை சேன்ட்லேவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த அழகான பெண் குழந்தையை 13 வயது அப்பா ஆல்பே தற்போது விவரம் தெரியாமல் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறான். இச்சம்பவம் மீடியா மற்றும் பத்திரிக்கைகளில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பையே ஏற்படுத்தி விட்டது.
இவன் எப்படி சம்பாதித்து இந்த குழந்தையை காப்பாற்ற போகிறாய் என்று அவனிடம் கேட்ட போது, சம்பாதிப்பது என்றால் என்ன என்று அப்பாவித்தனமாக குழந்தைத்தனமாக கேட்டானாம் ஆல்பே. 13 வயது குழந்தைக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிற விஷயம் இங்கிலாந்தில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டில் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் தரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 10, 2009

முகவுரை

எழுது என்று ஒரு குரலும்,
எதற்கென்று மறு குரலும்,

என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான

முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை,

ஆனலும்,

வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.