என்னடா இவன் திடீரென தூக்கத்தை பற்றி எழுதுகிறான் என நினைக்கிறீங்களா? இல்லங்க இப்போது அனேகமானவர்கள்; வேளைகளின்றி தூங்குகிறார்களே அவர்களுக்காக (எனக்கும் சேர்த்துதான் ஓ கே யா) அண்மையில் எனக்கு ஒரு புத்தகம் படிக்க கிடைத்தது அந்த புத்தகத்தில் இருந்ததை நான் அப்படியே உங்களுக்காகவும் சுட்டு தருகிறேன் கொஞபடிச்சு பாருங்களன்……….
“தூக்கம் என் கண்களை தழுவட்டுமேதுயரம்
என் நெஞ்சினியில் விலகட்டுமே”
தூக்கத்தைப் பற்றி வெகுகாலமாகவே பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறிவந்திருக்கின்றனர். சேக்ஸ்பியர் தன்னுடைய உலகப் பிரசித்தி பெற்ற மாக்பெத் என்ற நாடகத்தில் தூக்கத்தைப் பற்றி பலவிதமான புகழ் மாலைகளைப்ச் சூட்டுகிறார்.கவலை என்ற கழிந்துNபுhன சட்டையைத் தைத்து மூடும் சாதனம் தூக்கம் என்று கூறும் சேக்ஸ்பியர் தூக்கம் என்பது அன்றாடம் ஏற்படுகின்ற மரணம். ஆனால் மறுநாள் விழித்துக்கொள்கிறோம். என்றோ ஒரு நாள் உறங்குவது போலக் கண்மூடும் மனிதன் மறுபடியும் விழிப்பதே இல்லை. அதனால் இரவு தூங்கப் போகும் நாம் மறுநாள் எழந்திடுவோம் என் நிச்சயமாக நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என மக்களை எச்சிக்கவும் செய்கின்றனார்.கடுமையான உழைப்பினால் உண்டாகும் அலுப்பினைக் கழுவித்தள்ளும் குளியல்தான் தூக்கம் என்று மொழிகிறார் .
மேலும் சொல்கிறார் தளர்ந்து போன மனத்துக்குத் தூக்கம் ஒத்தடம் கொடுக்கிறது. தூக்கம் இறைவன் தந்த விலைமதிப்பற்ற கொடை. வாழ்க்கை என்ற விருந்தில் பரிமாறப்படும் அருமையான ஊட்டச்சத்து தூக்கம். உங்கள் அருகில் தன்னைமறந்து தூங்கும் உங்கள் மனைவியைப் பாருங்கள் காலை முதல் மாலை வரை பம்பரமாய் இயங்கிய அவளுக்கு அந்தத் தூக்கமும் இரவில் இல்லை என்றால் அந்தக்குடும்பப் பெண்ணுக்கு ஓய்வு தான் எப்போது? பகல முழுக்க உழைத்து வியர்வை சிந்துவதும் இந்த இராப் பொழுதில் தான்.
ஆண்டவன் இரவைக் கொடுத்தது மனிதனுக்கு உடலில் ஒரு பகலைக் கொடுப்பதற்காகவே. சேக்ஸ்பியரின் உணர்ச்சிபூர்வமான இந்த மொழிகள் தூக்கம் பற்றித் தெளிவான விளக்கங்களாக அமைந்துள்ளன.மனிதன் உடல்,உள்ளம், ஆகிய இரண்டின் நலத்தையும் காக்கவும் , மீட்கவும் இயற்கை அளித்த விலைமதிப்பற்ற அதிசயப்பரிசு உறக்கம். தூங்குவதற்கு முன் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு உண்ணுங்கள். உண்ணும் வேளையில் விவாதங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உறங்குவதற்கு முன் நல்லதோ கெட்டதோ எந்தச் சிந்தனைகளும் இன்றி மனதை அமைதியாக வைத்துக்கொண்டு தூங்கச் செல்லுங்கள்.
எதையாவது நினைக்கத்தொடங்கினால் நினைவுகள் சங்கிலி;த்தொடர்புகளாக வந்து தூக்கநேரத்தில் பாதியை விழுங்கிவிடும். உறங்குவதும் விழிப்பதும் அவன் கையில் அதனால்தான் மேலைத்தேசத்தவர்கள் உறங்கச் செல்லமுன் குட் நைட் என்று வாழ்த்தி அனுப்புகிறார்கள்.