Monday, February 16, 2009

13 வயது சிறுவன் அப்பாவானான் இது பிரிட்டனில் நடந்த கொடுமை

இங்கிலாந்தை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுவன் அப்பாவாகி இருக்கிறான். இங்கிலாந்து முழுக்க இதைப் பற்றி தான் இப்போது பேசப்படுகிறது.
இது வருத்தத்திற்குரிய விஷயம் என்று அந்நாட்டு பிரதமர் கார்டூன் பிரவுன் கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன் அருகே உள்ள ஈஸ்ட் பார்ன் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுவன் ஆல்பே. இவனது பெண் தோழி சேன்ட்லே. ஆல்பேவை விட 2 வயது மூத்தவள். அதே பகுதியை சேர்ந்தவள். சேன்ட்லே வீட்டுக்கு ஆல்பே அடிக்கடி போவான். இருவரும் சேர்ந்து விளையாடுவது வழக்கமாம். சிறுவர்கள் தானே என்று பெற்றோரும் சீரியசாக எடுத்து கொள்ளாமல் பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் எல்லை மீறி விளையாடி விட்டார்களாம். அதன் விளைவு சேன்ட்லே கர்ப்பமானார்.
இந்த விஷயம் சேன்ட்லே பெற்றோருக்கு தாமதமாக தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். சேன்ட்லேயிடம் இது பற்றி விசாரித்த போது ஆல்பே தான் காரணம் என்று கூலாக சொன்னாள். காலம் கடந்து விட்டதால் கருவை கலைக்கவும் முடியவில்லை. இதன் விளைவாக கடந்த திங்கட்கிழமை சேன்ட்லேவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த அழகான பெண் குழந்தையை 13 வயது அப்பா ஆல்பே தற்போது விவரம் தெரியாமல் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறான். இச்சம்பவம் மீடியா மற்றும் பத்திரிக்கைகளில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பையே ஏற்படுத்தி விட்டது.
இவன் எப்படி சம்பாதித்து இந்த குழந்தையை காப்பாற்ற போகிறாய் என்று அவனிடம் கேட்ட போது, சம்பாதிப்பது என்றால் என்ன என்று அப்பாவித்தனமாக குழந்தைத்தனமாக கேட்டானாம் ஆல்பே. 13 வயது குழந்தைக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிற விஷயம் இங்கிலாந்தில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டில் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் தரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Tuesday, February 10, 2009

முகவுரை

எழுது என்று ஒரு குரலும்,
எதற்கென்று மறு குரலும்,

என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான

முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை,

ஆனலும்,

வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.